பிகாரில் வெற்றியை நோக்கி பயணித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மகாராஷ்டிர துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
பிகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. இதுவரை எண்ணப்பட்ட 14 சுற்றுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. அதேசமயம் காங்கிரஸ் கூட்டணியான ஆர்ஜேடி தொடர்ந்து பிண்ணடைவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், மகராஷ்டிர துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் எக்ஸ் தளத்தில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஏக்நாத் ஷிண்டேவின் எக்ஸ் பதிவில்,
வெற்றியை நோக்கி பயணிக்கும் தேசிய ஜனநாயக கட்சிக்கு எனது பாராட்டுக்கள். மக்கள் காட்டாட்சியை நிராகரித்து, வளர்ச்சிக்கான ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
பிகார் நிதிஷ் குமார் மற்றும் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளது. மகாராஷ்ரத்தைப் போலவே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை உறுதி செய்துள்ளது.
வாக்கெடுப்பில் பெண்களின் அதிக பங்கேற்பு தேசிய ஜனநாயக் கூட்டணியின் வெற்றிக்கு உதவியதாக அவர் கூறினார்.
அஜித் பவார் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வாழ்த்துகள். பிகார் மாநிலத்தையும் அதன் மக்களையும் வழிநடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நல்லாட்சி மற்றும் முற்போக்கான எதிர்காலத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளதாக அவர் கூறினார்.
பிகாரின் 243 சட்டப்பேரவை தொகுதியில் 180 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியை நோக்கிச் செல்கிறது. பாஜக கூட்டணி பெரும்பாண்மையுடன் வெற்றிபெறும் என்று அவர் தெரிவித்தார்.
அதேசமயம் காங்கிரஸ் தலைமையிலான ஆர்ஜேடி தொடர் பிண்ணடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.