பிகாரில் நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று ஒருங்கிணைந்த ஜனதா தளம் சமூக ஊடகத்தில் பதிவிட்டதுடன், அதனை உடனடியாக நீக்கியும் விட்டதாகக் கூறப்படுகிறது.
பிகார் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும்நிலையில், ஆளுங்கட்சியான ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் எக்ஸ் பக்கத்தில், முன்னெப்போதும் இல்லாதது. பிகாரின் முதல்வராக நிதிஷ்குமார் இருந்தார்; இருக்கிறார்; தொடர்ந்து இருப்பார்’’ என்று பதிவிட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களிலேயே பதிவை நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, பிகாரின் பல்வேறு இடங்களில் ``25-லிருந்து 30, மீண்டும் நிதிஷ்குமார்’’ என்ற சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கின்றன.
இருப்பினும், பிகார் தேர்தலில் பாஜகவும் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவுகின்றன.
பிகாரில் நிதிஷ்குமார் தலைமையின்கீழ் தேர்தலில் போட்டியிடுவோம் என்றுதான் பாஜக கூறியதேதவிர, நிதிஷ்குமார்தான் முதல்வர் என்று பாஜக கூறவில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவுகின்றன.
மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டேவின் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்ட பாஜக, மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றதையடுத்து, தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராக அறிவித்தது.
இதே நிலைமைதான் பிகாரிலும் நிகழ வாய்ப்புகள் இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். பிகாரில் துணை முதல்வர் சாம்ராட் சௌதரி முதல்வராக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், சுமார் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்துவரும் நிதிஷ்குமாரை தவிர்த்து விடவும் முடியாது என்பதை பாஜக அறிந்திருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இதையும் படிக்க: பிகாரின் நீண்ட கால முதல்வர் நிதீஷ் குமார்! ஆனால், 20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாதது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.