தந்தையுடன் ரோஹிணி ஆச்சார்யா.  IANS
இந்தியா

லாலுவின் மகள் அரசியலில் இருந்து விலகல்

ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

பிகார் பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தோல்வியடைந்த நிலையில் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தேஜஸ்வியின் அண்ணன் தேஜ் பிரதாப் யாதவும் ஏற்கெனவே தனிக்கட்சி தொடங்கியிருக்கும் நிலையில் சகோதரியும் அரசியலில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து ரோஹிணி ஆச்சார்யா தனது எக்ஸ் தளத்தில், "நான் அரசியலை விட்டு விலகுகிறேன். எனது குடும்பத்துடனான உறவையும் முறித்துக்கொள்கிறேன்.

சஞ்சய் யாதவும் ரமீஸும் என்னிடம் செய்யச் சொன்னது இதுதான். மேலும் நான் எல்லாப் பழிகளையும் ஏற்றுக்கொள்கிறேன்,". இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினரான சஞ்சய் யாதவ், தேஜஸ்வி யாதவின் மூத்த அரசியல் ஆலோசகராக அறியப்படுகிறார் .

பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, மாபெரும் பலத்துடன் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. பாஜக 89 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அதேநேரம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய ‘இண்டி’ கூட்டணி வெறும் 34 இடங்களுடன் தோல்வியைச் சந்தித்தது.

பிகாரில் நடந்த வாக்குத்திருட்டை விரைவில் அம்பலப்படுத்துவோம்: கே.சி. வேணுகோபால்

Rohini Acharya, Lalu Yadav's daughter, in a cryptic post on X, announced that that she is quitting politics.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த வயது முதிர்ந்த தாயும் மகனும் தற்கொலை: போலீஸ் விசாரணை

ஐபிஎல் மினி ஏலம்- எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை?

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! பாஜக பிரமுகருக்கு சாகும் வரை ஆயுள் சிறை!

கதையா? இசையமைப்பாளரா? சுந்தர். சி விலகக் காரணம் என்ன?

எஸ்ஐஆரின் கீழ் 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் 95% மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT