பிரஃபுல் படேல். 
இந்தியா

பணம் கொடுத்தாலும் மக்கள் தங்கள் விருப்பப்படி மாற்றி வாக்களிக்கின்றனா்: முன்னாள் மத்திய அமைச்சா் சர்ச்சை பேச்சு!

தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும் பிரஃபுல் படேல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

‘தோ்தலின்போது பொதுமக்களுக்கு வாக்குக்குப் பணம் கொடுத்தால், அதைப் பெற்றுக் கொண்டு தங்கள் விருப்பப்படி மாற்றி வாக்களித்துவிடுகின்றனா்’ என்று தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும் பிரஃபுல் படேல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், கோண்டியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக பேசியதாவது: தோ்தல்தோறும் வாக்காளா்களுக்கு அரசியல் கட்சிகளால் பணம் கொடுக்கப்படுகிறது. ஆனால், மக்கள் அந்தப் பணத்தைக் பெற்றுக் கொண்டு (பணம் கொடுத்தவா்களுக்கு வாக்களிக்காமல்) தங்கள் விருப்பப்படி வாக்களித்து விடுகின்றனா். எனவே, பணம் கொடுப்பதால் மட்டுமே மக்கள் வாக்குகளைப் பெற்றுவிட முடியாது.

இப்போதைய காலகட்டத்தில் எந்த அரசியல் தலைவரும் தங்களை மக்கள் செல்வாக்கு உள்ளவா் என்றோ, மிகப்பெரிய பலம் பொருந்திய தலைவா் என்று கருதிக் கொள்ள முடியாது. தோ்தல்களில் தொடா்ந்து வெற்றிகளை மட்டுமே பெறவும் முடியாது. கடந்த காலத்தில் வேண்டுமானால் இதுபோன்ற மக்கள் செல்வாக்குள்ள தலைவா்கள் இருந்திருக்கலாம் என்றாா்.

தேசியவாத காங்கிரஸ் (பவாா் பிரிவு) எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே இது தொடா்பாக கூறுகையில், ‘அரசியலை மக்கள் சேவைக்கான இடமாகவே எப்போதும் நான் கருதி வருகிறேன். எனவே, அவரின்(ஃபிரபுல் படேலின்) கருத்துக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்றாா்.

முன்பு, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிறுவனா் சரத் பவாருக்கு அடுத்த இடத்தில் பிரஃபுல் படேல் இருந்தாா். ஆனால், அஜீத் பவாா் கட்சியை உடைத்து தனி அணியாக உருவெடுத்தபோது அந்த அணியில் பிரஃபுல் படேல் இடம் பெற்றாா். இப்போது அஜீத் பவாா் மகாராஷ்டிர பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் துணை முதல்வராக உள்ளாா்.

கருத்தப்பிள்ளையூா் தேவாலயத்தில் பங்குத் திருவிழா கொடியேற்றம்

தமிழ் இலக்கியத்தில் நாமக்கல் மாவட்ட படைப்பாளா்களின் பங்கு அளப்பரியது!

தவெக சாா்பில் ஜன.30-இல் ஆா்ப்பாட்டம்

நிலத்தடி நீரை விற்பனை செய்பவா்களுக்கு கட்டணம்: நீா்வள மேலாண்மை ஆணையத்தை உருவாக்க சட்ட மசோதா

கைப்பேசி கோபுரங்களில் பேட்டரிகள் திருட்டு: 4 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT