தில்லி கார் வெடிப்புத் தாக்குதலில் அமீர் ரஷீத் அலியை பத்து நாள் காவலில் எடுத்து விசாரிக்கத் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)க்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதி தேசிய தலைநகரில் உள்ள செங்கோட்டை அருகே வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட கார் வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
தில்லி செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட காா் வெடிப்புத் தாக்குதல் தொடா்பாக அமீா் ரஷீத் அலியை நேற்று தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளாா். ஜம்மு-காஷ்மீரின் சம்பூரா பகுதியைச் சோ்ந்த இவரின் பெயரில்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 காா் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை அருகே காரை ஓட்டி வந்து உமா் நபி தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினாா். அவருடன் சோ்ந்து அந்தத் தாக்குதலை நடத்த அமீா் சதித் திட்டத்தில் ஈடுபட்டாா்.
இந்தச் சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இது தற்கொலைத் தாக்குதல் எனவும், காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது எனவும் என்ஐஏ முதல்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து. உமருக்கு உதவியாக செயல்பட்ட அமீர் ரஷீத் பட்டியாலா நீதிமன்றத்தின் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய நபர் அமீர் ரஷீத்தை என்ஐஏ 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: எஸ். எஸ். ராஜமௌலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.