பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணியில் அங்கம்வகித்த பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இந்தியா கூட்டணி தரப்பில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வியைச் சந்தித்தது.
தேர்தல் முடிவுகளையடுத்து 10-வது முறையாக பிகார் முதல்வராக மீண்டும் நிதீஷ் குமார் பதவியேற்கிறார். பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வருகிற நவ. 20, வியாழக்கிழமை அன்று பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதையடுத்து பிகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் இன்று ராஜிநாமா செய்தார். ஆளுநர் ஆரிஃப் முகமது கானைச் சந்தித்து தனது ராஜிநாமா கடித்ததை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். ஆர்ஜேடி சரியாக 243 தொகுதிகளில் 10 சதவீதமான 25 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிகார் தேர்தலிலும் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.