கர்நாடக வனவிலங்கு பூங்காவில் மேலும் 2 அரிய வகை மான்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகாவியில் உள்ள கிட்டூர் ராணி சென்னம்மா வனவிலங்கு பூங்காவில் மேலும் இரண்டு அரிய வகை மான்கள் உயிரிழந்தன. இத்துடன் கடந்த நான்கு நாள்களில் உயிரிழந்த மொத்த மான்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக வனவிலங்கு பூங்கா வட்டாரங்கள் திங்களன்று தெரிவித்தன.
இதனால் வனவிலங்கு பூங்காவில் அரிய வகை மான்களின் எண்ணிக்கை 38 லிருந்து எட்டு ஆகக் குறைந்துள்ளது. வியாழக்கிழமை எட்டு மான்கள் உயிரிழந்ததாகவும், அதைத் தொடர்ந்து சனிக்கிழமை மேலும் 20 மான்கள் உயிரிழந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் ஞாயிற்றுக்கிழமை, இந்த வளாகத்தில் மேலும் இரண்டு மான்கள் இறந்தன. மான்கள் பாக்டீரியா தொற்று காரணமாக இறந்தனவா அல்லது வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் இறந்தனவா என்று வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"மான்கள் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா விலங்கியல் பூங்காவில் உள்ள அதிகாரிகளுக்கு உள்ளுறுப்பு மாதிரியை அனுப்பியுள்ளோம்" என்று வனவிலங்கு பூங்கா அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.