தில்லியின் ஆசாத்பூரில் 40 மின்சார பேருந்துகள் மற்றும் நவீன பேருந்து முனையத்தைத் தில்லி முதல்வர் ரேகா குப்தா கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங், ஆதர்ஷ் நகர் பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் பாட்டியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தில்லி முதல்வர் ரேகா குப்தா பேசுகையில், உங்கள் அனைவரையும் வாழ்த்த விரும்புகிறேன். இந்த அரசின் சாதனை உங்கள் வாக்கு பலத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ஆட்சி அமைத்தவர்கள் விளம்பர அரசை உருவாக்கினர். இது தலைநகருக்கு வளர்ச்சியைக் கொண்டுவரத் தவறிவிட்டது. தற்போதைய தில்லி அரசு விளம்பரம் செய்யவில்லை. ஆனால் முன்னேற்றத்தை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
தில்லி பல வருடங்களாக பிரச்னைகளில் சிக்கித் தவித்தது. கேட்க ஆளில்லை. விளம்பரங்கள் மட்டுமே அரசாக இருந்தது. ஆனால் தற்போதைய அரசு தலைநகருக்குப் பெரிய திட்டங்களை நிறைவேற்றுகிறது.
முந்தைய அரசு கடந்த 11 ஆண்டுகளில் 2,000 பேருந்துகளை மட்டுமே தலைநகருக்குக் கொண்டு வந்தது. இன்று தில்லிக்கு 40 மின்சார பேருந்துகளும், பேருந்து முனையமும் கொண்டு வந்துள்ளோம். இரண்டு நாள்களுக்கு முன்பு தில்லிக்கு 50 பேருந்துகளை வழங்கியுள்ளது. தில்லி மக்களுக்கு 8 மாதங்களில் 1,400 பேருந்துகளைத் தில்லி அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.