அன்மோல் பிஷ்னோயை கைது செய்தது என்ஐஏ Photo: NIA
இந்தியா

நாடு கடத்தப்பட்ட அன்மோல் பிஷ்னோயை கைது செய்தது என்ஐஏ!

நாடு கடத்தப்பட்ட அன்மோல் பிஷ்னோயை என்ஐஏ கைது செய்ததது பற்றி...

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை தில்லி விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்தாண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் ஹிந்தி நடிகா் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு தாமே காரணம் என்று தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் தெரிவித்தாா். சல்மானை கானை கொல்ல அந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்துபாந்த்ராவில் மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

இந்த குற்றங்கள் உள்பட மேலும் சில குற்ற வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் குற்றவாளியாக சோ்க்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் அமெரிக்காவில் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் கொடுத்ததை தொடர்ந்து, அங்கிருந்து அன்மோல் பிஷ்னோயை நாடு கடந்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்காவில் இருந்து அன்மோலை அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை நாடு கடத்தியது.

தில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த அன்மோல் பிஷ்னோயை முறைப்படி என்ஐஏ அதிகாரிகள் குழு கைது செய்து அழைத்துச் சென்றது.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விசாரணைக்காக என்ஐஏ காவலில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NIA arrests deported Anmol Bishnoi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: நீ ஹீரோடா! வெளியே வந்ததும் கமருதீனிடம் பேசிய கானா வினோத்!

ஜன. 26 முதல்.. இந்திய சந்தையில் மீண்டும் ரெனால்ட் டஸ்டர்!

பராசக்தி பட வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 29

நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடையா? - தமிழக அரசு விளக்கம்

SCROLL FOR NEXT