பண மோசடி முதலீட்டு வழக்குகள் தொடர்பாக ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி ஆஜரானார்.
ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பண மோசடி ஒப்பந்தங்களில் முதன்மை குற்றவாளியாக 11 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையை எதிரக்கொண்டுள்ளார்.
நவம்பர் 21ஆம் தேதிக்குள் ஜெகன்மோகன் ரெட்டி விசாரணையில் கலந்துகொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் வருகையைக் கருத்தில் கொண்டு, நீதிமன்ற வளாகம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதற்கு முன்னதாக கடைசியாக ஜனவரி 2020இல் ஆந்திரப் பிரதேச முதல்வராக இருந்தபோது நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2004 - 2009க்கு இடையே ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, பல்வேறு நிறுவனங்களில் அவர்களுக்கு வழங்கிய சலுகைகளுக்கு ஈடாக அவரது நிறுவனங்களில் செய்த முதலீடுகள் தொடர்பான வழக்குகள் தற்போத விசாரிக்கப்படுகிறது.
ஜெகன்மோகன் ரெட்டி தற்போது உள்ள வழக்குகளில் ஜாமீனில் வெளியே உள்ளார்.
முன்னதாக, ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவிலிருந்து தரையிறங்கிய பிறகு, ஏராளமான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் பேகம்பேட்டையில் உள்ள விமான நிலையத்தில் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.