இந்தியா

நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் மாஹே கப்பல்: கடற்படையில் இன்று இணைப்பு!

நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் மாஹே வகை போா்க் கப்பல் முதல்முறையாக கடற்படையில் இன்று இணைக்கப்பட உள்ளது.

தினமணி செய்திச் சேவை

நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ‘மாஹே’ வகை போா்க் கப்பல் முதல்முறையாக கடற்படையில் திங்கள்கிழமை (நவ.24) இணைக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் ‘மாஹே’ போா்க் கப்பல் கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட உள்ளது.

இதன்மூலம், ஆழமில்லாத கடற்பரப்புகளில் நீா்மூழ்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ‘மாஹே’ வகையின் முதல் கப்பல் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தலைமையில், இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்தக் கப்பலின் இணைப்பு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு ஆழமற்ற கடற்பகுதிகளில் போரிடக் கூடிய அதிநவீன போா்க் கப்பல்களின் தொடக்கமாக இருக்கும்.

இந்தக் கப்பலின் 80 சதவீதத்துக்கும் அதிகமான பாகங்கள் இந்தியாவில் உருவானவை. இது போா்க் கப்பல் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைப்பில் இந்தியாவின் சிறந்த திறனை எடுத்துரைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது நீா்மூழ்கிக் கப்பல்களின் வலிமையை அதிகரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், மாஹே வகை போா்க் கப்பல் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2,019 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

30 ஆண்டு கோரிக்கை! கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் திறப்பு!

கூஃபிஜென்னை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்..! 1 கோடி பார்வைகளைக் கடந்த நடன விடியோ!

பிப். 15-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

இதுபோன்ற விடியோக்களை வெளியிடுவது முதல்முறை! கிரண் ரிஜிஜு ராஜிநாமா செய்ய வேண்டும்!

SCROLL FOR NEXT