தேசிய சட்ட உதவி ஆணையத்தின் (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத்தை நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
அதுபோல, உச்சநீதிமன்ற சட்ட உதவி ஆணையத்தின் (எஸ்சிஎல்எஸ்சி) புதிய தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர குமாா் மகேஸ்வரியை நியமித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த் உத்தரவிட்டாா்.
மரபுபடி, உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்ஏஎல்எஸ்ஏ செயல் தலைவராகவும், இரண்டாவது மூத்த நீதிபதி எஸ்சிஎல்எஸ்சி தலைவராகவும் நியமிக்கப்படுவா். அதன்படி, சட்டப்படி தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இந்த நியமனங்களை செய்தனா்.
நாடு முழுவதும் உள்ள நலிந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இலவச சட்ட உதவிகள் கிடைப்பதை இந்த அமைப்புகள் உறுதிப்படுத்தும்.