மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக மகாராஷ்டிர அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர அமைச்சர் பங்கஜா முண்டேவின் தனிப்பட்ட உதவியாளர் அனந்த் கார்ஜே. இவரது மனைவி டாக்டர் கௌரி பால்வே (28).
வீட்டுத் தகராறு காரணமாக சனிக்கிழமை வோர்லியில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கௌரியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், கார்ஜே மற்றும் அவரது இரண்டு உறவினர்கள் மீது வோர்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக கார்ஜே திங்கள்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அதிகாரி மேலும் கூறினார்.
அனந்த் - கௌரி இருவருக்கும் பிப்ரவரியில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, கௌரி கேஇஎம் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணிபுரிந்தார். குடும்பத்தினர் கூறுகையில், கௌரி தனது கணவரால் துன்புறுத்தப்பட்டார்.
இதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்தது என்றனர்.
கௌரியின் மாமா, இதுதற்கொலைக்கு பதிலாக கொலையாக இருக்கலாம். எனவே, உடற்கூராய்வை விடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.