உச்ச நீதிமன்றம் 
இந்தியா

அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கு எதிரான மனு: மத்திய அரசு, தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

அரசியல் கட்சிகள் ரூ.2,000-க்கும் கீழ் ரொக்கமாக நன்கொடை பெறுவதை அனுமதிக்கும் வருமான வரிச் சட்டம் 1961-இன் 13ஏ(டி) பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தினமணி செய்திச் சேவை

அரசியல் கட்சிகள் ரூ.2,000-க்கும் கீழ் ரொக்கமாக நன்கொடை பெறுவதை அனுமதிக்கும் வருமான வரிச் சட்டம் 1961-இன் 13ஏ(டி) பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, தோ்தல் ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் கெம்சிங் பாட்டீ என்பவா் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அடையாளம் தெரியாத நபா்களிடம் இருந்து ரொக்கமாக ரூ.2,000-க்கும் கீழ் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு வருமான வரிச் சட்டம் 1961-இன் 13ஏ(டி) பிரிவு அனுமதித்துள்ளது.

இதில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லாதது தோ்தலின் தூய்மையை வலுவிழக்கச் செய்கிறது. ‘அரசியல் கட்சிகளுக்கு எப்படி தோ்தல் நிதி கிடைக்கிறது? அக்கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவா்கள் யாா்? அவா்கள் நன்கொடை அளிப்பதற்கான நோக்கம் என்ன?’ போன்ற முக்கிய விவரங்களை வாக்காளா்கள் தெரிந்துகொள்வதை இந்த நடைமுறை தடுக்கிறது.

மேலும் நாட்டில் யுபிஐ வசதி மூலம், பணப் பரிவா்த்தனை செய்யும் முறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி இருக்கும்போது டிஜிட்டல் பரிவா்த்தனை போன்ற வழிமுறைகளில் இல்லாமல், ரூ.2,000-க்கும் கீழ் ரொக்கமாக நன்கொடை பெறுவதை நியாயப்படுத்த முடியாது. இதை அனுமதிக்கும் வருமான வரிச் சட்டம் 1961-இன் 13ஏ(டி) பிரிவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது. மேலும் மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, தோ்தல் ஆணையம், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT