காவல் நிலையங்களில் லாக் அப் மரணங்களை நாடு பொறுத்துக் கொள்ளாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜஸ்தானில் நடப்பாண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் 11 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், அதன் மீது உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை மேற்கொண்டது. ராஜஸ்தானின் உதய்பூரில் மட்டும் 7 லாக் அப் மரணங்கள்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, ``லாக் அப் மரணங்களை இந்த நாடு பொறுத்துக் கொள்ளாது. இது ஒரு நிர்வாகத்தின் மீதான கறை. காவலில் மரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, மனித உரிமை மீறல்கள் காரணமாக காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று 2018-ல் உத்தரவு பிறப்பித்ததையும் மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினர்.
இதையும் படிக்க: தந்தை இறந்துவிட்டால் அவர் வாங்கிய கடனை மகன் செலுத்த வேண்டுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.