நரேந்திர மோடி  படம் - பிடிஐ
இந்தியா

நாட்டில் அமைதி முக்கியம்; ஆனால், பாதுகாப்பில் சமரசமில்லை - பிரதமர் மோடி

குருக்ஷேத்ராவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டில் அமைதி நிலவுவது மிகவும் முக்கியம் என்றும் ஆனால், பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரே இதற்கு சாட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 350வது தியாக நாளையொட்டி ஹரியாணா மாநிலம் குருஷேத்ராவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

ராமாயணத்தின் நகரமான அயோத்தியாவுக்கு இன்று காலை சென்றிருந்தேன். தற்போது கீதையின் நகரமான குருக்ஷேத்ராவுக்கு வருகைப் புரிந்துள்ளேன். ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 350 வது தியாக நாளில் நாம் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைத்து துறவிகளுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

குரு தேஜ் பகதூரைப் போன்றவர்கள் வரலாற்றில் மிகவும் அரிதானவர்கள். அவரின் வாழ்க்கை, அவரின் தியாகம், பண்பு, போன்றவை பலருக்கும் முன்னுதாரணமானவை. முகலாயர்களின் படையெடுப்பில் காஷ்மீர் ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.

ஸ்ரீ குரு தேஜ் பகதூர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால் நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம் என முகலாய மன்னர் ஒளரங்கசீப்பிடம் சென்று கூறுங்கள் என்று ஸ்ரீ குரு சாஹிப் தெரிவித்திருந்தார்.

உண்மையையும் நீதியையும் காப்பதே சிறந்த மதம் என இந்த குருக்‌ஷேத்ர மண்ணில் நின்றுக்கொண்டு கிருஷ்ணர் அறிவித்தார். ஸ்ரீ குரு தேஜ் பகதூரும் உண்மை, நீதி மற்றும் நம்பிக்கையை காப்பதே உண்மையான மதமாகக் கருதினார்.

நமது குருக்களின் பாரம்பரியம் நாட்டின் தன்மை, கலாசாரம், மற்றும் தைரியம் போன்றவற்றின் அடித்தளமாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தேர்வு நேரத்தில் எஸ்ஐஆர் பணிகளில் மாணவர்கள்? கேரள அமைச்சர் அறிவுறுத்தல்!

Guru Tegh Bahadur's life, sacrifice is great source of inspiration: PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு! பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!

“தமிழருக்கு எதிராகப் பேசுவதே ஆளுநர் RN RAVI-ன் கொள்கை!” அமைச்சர் ரகுபதி பேட்டி

"தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்!": மு.க.ஸ்டாலின் | செய்திகள்: சில வரிகளில் | 25.11.25

22% ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி அளிக்க விவசாயிகள் கோரிக்கை

சிக்கி முக்கி நெருப்பே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT