ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் PTI
இந்தியா

ராம ராஜ்ஜியத்தின் கொடி பறக்கிறது! மோகன் பாகவத்

அயோத்தியில் ராமர் கோயில் கொடியேற்று விழாவில் மோகன் பாகவத் பேசியது...

இணையதளச் செய்திப் பிரிவு

ராம ராஜ்ஜியத்தின் கொடி அயோத்தி கோயிலின் பறக்கின்றது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 191 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்புக் கொடி இன்று ஏற்றப்பட்டது.

அயோத்தி கோயில் மூலவர் ஸ்ரீபாலராமரை பிரதமர் நரேந்திர மோடியும், மோகன் பாகவத்தும் இணைந்து வழிபட்ட பின்னர், இருவரும் கொடியை ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து, அயோத்தி கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் பேசிய மோகன் பாகவத்,

”இன்று நிறைவும் மகிழ்ச்சியும் கொடுக்கும் நாள். இதற்காக எத்தனையோ உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆன்மாக்கள் அனைத்தும் இன்று நிச்சயம் சாந்தியடையும். அசோக் சிங்கால் அமைதி அடைந்திருப்பார்.

மஹந்த் ராமச்சந்திர தாஸ், விஷ்ணு ஹரி டால்மியா மற்றும் ஏராளமான புனிதர்கள், மக்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் உயிரைத் தியாகம் செய்து இதற்காகக் கடுமையாக உழைத்தனர். அவர்களால் பங்கேற்க முடியாமல் போனாலும் இந்தக் கோயிலுக்காக கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் இன்று நிறைவு அடைந்திருப்பார்கள்.

கோயில் கட்டப்பட்டு இன்று கொடி ஏற்றப்பட்டுவிட்டது. உலகிற்கு நிம்மதி அளித்த ராம ராஜ்ஜியத்தின் கொடி கோயிலின் உச்சியில் பறக்கின்றது. நூற்றாண்டு போராட்டங்களை ஒதுக்கிவைத்து பார்த்தாலும், இந்த இடத்துக்கு வர நமக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டது” என்றார்.

The flag of Ram Rajya is flying! Mohan Bhagwat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகக் குறைப்பு - அரசாணை வெளியீடு!

லாபம் ஈட்டிய வீவொர்க் இந்தியா!

அஜீத் பவார் மரணம்! கேள்விகள் எழுகிறது!: மமதா! | செய்திகள்: சில வரிகளில் | 28.01.26

காந்தி டாக்ஸ் படத்தின் முன்பதிவு தொடக்கம்!

சண்டிகரில் ஒரே நாளில் 30 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT