ஹரியாணாவில் கூடைப்பந்து வீரர் ஹர்திக் உயிரிழப்புக்கு பாஜக அரசுதான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஹரியாணாவின் ரோஹ்தக்கில் கூடைப்பந்து பயிற்சியின்போது, கூடைப்பந்து வீரர் ஹர்திக் (16) மீது கூடைப்பந்து கம்பம் விழுந்ததில், ஹர்திக் பலியானார். ஹர்தீக், சமீபத்தில் தேசிய அணிக்குத் தேர்வாகியிருந்தார்.
இந்த நிலையில், விளையாட்டு மைதானங்களுக்காக மாநில அரசான பாஜக அரசு நிதி தருவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. தீபேந்திரர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ``இதைவிட சோகமான சம்பவம் என எதுவும் இருக்க முடியாது. கடந்த 11 ஆண்டுகளில் ஹரியாணாவில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களுக்கான பட்ஜெட்டை பாஜக அரசு நிறுத்தியதால்தான் ஹர்திக் உயிரிழந்தார்.
அனைத்து விளையாட்டு அரங்குகளும் காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை. இது விளையாட்டு உள்கட்டமைப்பு மீதான அலட்சியம் அல்ல, ஆனால் அவர்களின் அலட்சியம். இது ஒரு குற்றவியல் அலட்சியம்.
3 ஆண்டுகளுக்கு முன்பாக, இங்கு பணிகள் மேற்கொள்வதற்காக நான் எனது எம்.பி.க்கான நிதியை விடுவித்தேன். ஆனால், நான் எதிர்க்கட்சி எம்.பி. என்பதால், அவர்கள் அதனை கோப்புகளோடேயே புதைத்து விட்டனர்.
பாரபட்சம் காட்டி வரும் இந்த அரசு, குழந்தைகள் விளையாட்டுகளில் ஈடுபடுவதை விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: அரசியலமைப்பின் மீது அக்கறை இருப்பதாக பாஜக-ஆர்எஸ்எஸ் பாசங்கு: கார்கே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.