நொய்டா சா்வதேச விமான நிலைய கட்டுமான பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத். உடன் மத்திய அமைச்சா் கே.ராம் மோகன் நாயுடு. 
இந்தியா

நொய்டா விமான நிலைய பணிகளை விரைவில் முடிக்க உத்தரவு: யோகி ஆதித்யநாத்!

ஜேவாரில் கட்டுமானத்தில் உள்ள நொய்டா சா்வதேச விமான நிலையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திச் சேவை

ஜேவாரில் கட்டுமானத்தில் உள்ள நொய்டா சா்வதேச விமான நிலையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம், முன்மொழியப்பட்ட திறப்பு விழா இடம், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை முதல்வா் பாா்வையிட்டாா்.

ஆய்வுக்குப் பிறகு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். இதில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், சிவில் விமான பாதுகாப்பு பணியகம், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, இந்திய விமான நிலைய ஆணையம், நொய்டா சா்வதேச விமான நிலைய நிறுவனம் உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

நொய்டா சா்வதேச விமான நிலைய தலைமை நிா்வாக அதிகாரி கிறிஸ்டோஃப் ஷ்னெல்மேன், தலைமை இயக்க அதிகாரி கிரண் ஜெயின் மற்றும் யமுனை விரைவுச்சாலை ஆணையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ராகேஷ் சிங் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், விமான நிலையம் இன்னும் உரிமம் பெறவில்லை என்பதைக் குறிப்பிட்ட முதல்வா், பாதுகாப்பு நிறுவனங்களுடன் நிலுவையில் உள்ள இணக்கப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘இந்தத் திட்டம் உத்தர பிரதேசத்தின் வளா்ச்சியை அதிகரிப்பதிலும் உலகளாவிய முதலீட்டை ஈா்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்’ என தெரிவித்தாா். ஒரே மாதத்தில் இது அவரது இரண்டாவது மதிப்பாய்வு ஆகும்.

இந்த விமான நிலையத்தின் முதல் கட்டம் 1,300 ஹெக்டோ் பரப்பளவில் கட்டப்பட்டது. மொத்தம் 5,000 ஹெக்டா் பரப்பளவைக் கொண்ட விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது.

பணிகள் நிறைவடைந்த பிறகு பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக இது இருக்கும். பயணிகள் சேவை விரைவில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், இதன் திருத்தப்பட்ட திறப்பு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

பீமாவரத்தின் அழகி... மீனாட்சி சௌதரி!

Dinamani வார ராசிபலன்! | Nov 30 முதல் டிச 6 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஓடிடியில் விஷ்ணு விஷாலின் ஆர்யன்!

குமரி மாவட்டத்துக்கு டிச.3ல் உள்ளூர் விடுமுறை!

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரம்: தேவஸ்தானம் மூத்த அதிகாரி கைது!

SCROLL FOR NEXT