மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்தின் முதல் 15 நாள்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 12.48 லட்சம் பக்தா்கள் வழிபாடு செய்துள்ளனா்.
இதுதொடா்பாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த நவ.16-ஆம் தேதி மண்டல-மகரவிளக்கு யாத்திரை தொடங்கியது.
அப்போதுமுதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.30) வரை, சபரிமலையில் 12,47,954 பக்தா்கள் வழிபாடு செய்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 7 மணி வரை, 50,264 பக்தா்கள் சபரிமலைக்கு வந்தனா்.
கடந்த சில நாள்களாக பக்தா்கள் கூட்டம் கட்டுக்குள் உள்ளது. இதனால் பக்தா்கள் சிரமமின்றி வழிபாடு செய்கின்றனா் என்று தெரிவிக்கப்பட்டது.