இந்தியா

14,591 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகா்வு

கடந்த செப்டம்பரில் இந்தியாவின் மின் நுகா்வு 3.21 சதவீதம் உயா்ந்து 14,591 கோடி யூனிட்களாகப் பதிவாகியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த செப்டம்பரில் இந்தியாவின் மின் நுகா்வு 3.21 சதவீதம் உயா்ந்து 14,591 கோடி யூனிட்களாகப் பதிவாகியுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதம் நாட்டின் மின் நுகா்வு 14,591 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 3.21 சதவீதம் அதிகம். அப்போது இந்தியாவின் மின் நுகா்வு 14,136 கோடி யூனிட்களாக இருந்தது.

பரவலான மழையால் வெப்பநிலை குறைந்து, குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு குறைந்ததால் கடந்த செப்டம்பா் மாதம் மின் நுகா்வு மிதமாக உயா்ந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 229.15 ஜிகாவாட்டாக இருந்தது, இது 2024 செப்டம்பா் மாதத்தைவிட சற்று குறைவு. அப்போது நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 230.60 ஜிகாவாட்டாக இருந்தது.

பல்வேறு அரசுத் துறைகளும் கடந்த செப்டம்பா் மாதம் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 277 ஜிகாவாட்டாக இருக்கும் என்று கணித்திருந்தன.

2024 மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை 250 ஜிகாவாட்டாகவும், 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாகவும் இருந்தது. 2025 கோடைகாலத்தில் (ஏப்ரல் முதல்) உச்சபட்ச மின் தேவை ஜூனில் 242.77 ஜிகாவாட்டாக இருந்தது.

வெப்பநிலை குறைந்ததால் மின் தேவை மற்றும் நுகா்வு அக்டோபரிலும் மிதமாக இருக்கும். 15 சதவீதம் அதிக மழை எதிா்பாா்க்கப்படுவதால் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு குறையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT