குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பதைப் பற்றி மருத்துவர்கள் தரப்பிலிருந்து பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளில் முக்கியமாக, ‘குழந்தைகளுக்கு இருமல் மருந்து அவசியமில்லை!’ என்பது தெளிவாகியுள்ளது.
மழைக் காலத்தில் குழந்தைகளுக்கு சளி இருமல் தொந்தரவு ஏற்படுவது தவிர்க்க இயலாதவை. ஆனால், அதற்காக இருமல் மருந்துகள் கொடுக்க தேவையில்லை. அம்மருந்துகளில் பெரும்பாலும் பல தரப்பட்ட ரசாயன மூலக்கூறுகள் கலந்த மருந்துகள் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும். இவற்றால் இருமலுக்கு முழு தீர்வு கிடைக்குமா என்பது உறுதியாகச் சொல்ல முடியாது என குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த மருத்துகளால் மார்பு வலியும் அசௌகரியமும்கூட ஏற்படக்கூடும். ஆனால், இவற்றையெல்லாம் அறியாமல், சர்வ சாதாரணமாக இருமல் மருந்துகளை வாங்கிக் குழந்தைகளுக்கு சிலர் கொடுக்கின்றனர். அது தவறு என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருமல் மருந்து எடுத்துக்கொண்டால், இருமல் தீருமா? என்பதே சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. பொதுவாக, இந்த மருந்துகளை எடுக்காமலேயே குழந்தைகள் இயல்பாகவே உடல்நலம் தேறி விடுவார்கள்.
ஆகவே, குழந்தைகளைப் பொருத்தவரையில், அதிலும் குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பெரும்பாலும் தவிர்ப்பதே நல்லது என மருத்துவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.