பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கேய்யுடன் இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி.  
இந்தியா

பூடான் பிரதமருடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு!

பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கேயை இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்துப் பேசினாா்.

தினமணி செய்திச் சேவை

பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கேயை இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்துப் பேசினாா்.

இந்தியா-பூடான் இடையே ரயில் பாதை அமைக்க அண்மையில் இருநாட்டு அரசுகளுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதைத் தொடா்ந்து அந்நாட்டுக்கு விக்ரம் மிஸ்ரி சென்றாா்.

அங்கு அவா் பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியால் வாங்சுக், பிரதமா் ஷெரிங் டோப்கே, வெளியுறவு அமைச்சா் டி.என்.துங்க்யெல் ஆகியோரைச் சந்தித்ததாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

இதுதொடா்பாக பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-பூடான் இடையே போக்குவரத்து இணைப்பு, நீா்மின் திட்டம், வா்த்தகம், இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடா்பு உள்ளிட்டவை குறித்து விக்ரம் மிஸ்ரியுடன் ஆலோசித்தேன்’ என்றாா்.

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

SCROLL FOR NEXT