அமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் பலியானதாக முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் எம்எல்ஏவுமான ஹரிஷ் ராவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த அவர், தானும் மற்ற கட்சித் தலைவர்களும் மாணவரின் குடும்பத்தினரைச் சந்தித்து இரங்கல் தெரிவித்ததாகக் கூறினார்.
இதுகுறித்து ஹரிஷ் ராவ் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "எல்.பி. நகரைச் சேர்ந்த தலித் மாணவர் போலே சந்திர சேகர், பிடிஎஸ் முடித்துவிட்டு உயர் படிப்புக்காக அமெரிக்கா (டல்லாஸ்) சென்றவர்.
அதிகாலையில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானார்"இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே. சந்திரசேகர ராவின் மருமகன் ஹரிஷ் ராவ், பலியான மாணவரின் உடலை தெலங்கானா கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.