அசாமிய பாடகர் ஸுபீன் கார்க் மரணம் குறித்த விசாரணையில், அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் செப். 20, 21 நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு சென்ற ஸ்பீன் கர்க், செப். 19-ல் ஸ்கூபா டைவிங் பயிற்சியின்போது, நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
இருப்பினும், அவரது மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதுடன், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணையும் நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஸுபீனின் மேலாளர் சித்தார்த் சர்மா, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷியாம்கனு மகந்தா, இசைக்குழு உறுப்பினர்கள் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் அமிர்தபிரபு மகந்தா ஆகியோர் 14 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில், ஷியாம்கனு மற்றும் அவரது நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வடகிழக்கு இந்தியா விழாவின் 4-வது பதிப்பில் கலந்துகொள்ள ஸுபீன் சென்றபோதுதான் அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரை சித்தார்த் மற்றும் ஷியாம்கனுவும் விஷம் கொடுத்து கொலை செய்ததாக சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸுபீனின் இறப்பில் சந்தேகம் எழக்கூடாது என்பதற்காக, அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், நன்றாக நீச்சலடிக்கும் ஸுபீன் நீரில் மூழ்குகையிலும் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்றும் சேகர் குற்றஞ்சாட்டினார்.
சிங்கப்பூரில் சித்தார்த்தின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும், ஸுபீனின் வாய் மற்றும் மூக்கில் இருந்து நுரை வந்தபோதும்கூட அதனை உணவுசெரிக்காததால் வெளிப்பட்ட அமிலம் என்று சித்தார்த் பொய் கூறியதாக சேகர் தெரிவித்தார்.
சித்தார்த்தின் நிதி பரிவர்த்தனை, சாட்சியங்கள், ஆவணப் பதிவுகள் உள்ளிட்டவை அவருக்கு எதிராகத்தான் காட்டுகின்றன என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.