முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு!

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு பற்றி...

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 9:30 AM
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர் பாபு
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 9:16 AM

சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், ஓபிஎஸ் தனது நிலைபாட்டை இன்று அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 9:16 AM

தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைத் தலைவர் அப்பாவுவை இன்று காலை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை அவர் ராஜிநாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த வாரம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.

இதனிடையே, திமுகவில் ஓபிஎஸ் இணைவாரா? அல்லது வெளியில் இருந்து ஆதரவு அளிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை தி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

OPS - Minister Shekhar Babu meeting!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.