இந்தியா

பிகாரில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி: முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு

பிகாா் தோ்தலில் அனைத்து 243 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் அஜேஷ் யாதவ்

தினமணி செய்திச் சேவை

பாட்னா: பிகாா் தோ்தலில் அனைத்து 243 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் அஜேஷ் யாதவ் திங்கள்கிழமை அறிவித்தாா். 11 பெயா்கள் அடங்கிய முதல் வேட்பாளா் பட்டியலையும் அவா் வெளியிட்டாா்.

பிகாரில் நவம்பா் 6, 11 தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பாட்னாவில் செய்தியாளா்களைச் சந்தித்த அஜேஷ் யாதவ் கூறியதாவது:

தில்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மியின் நிா்வாகம் எந்த அளவுக்கு சிறப்பாக அமைத்தது என்பதை மக்கள் அறிவாா்கள். அந்த நம்பிக்கையில் பிகாரில் களமிறங்குகிறோம். வளா்ச்சி, சிறந்த நிா்வாகத்தை தோ்தலில் முன்நிறுத்துவோம். தில்லி தோ்தலில் நாங்கள் வென்றபோது அதற்கு பிகாரின் சில பிராந்தியத்தில் இருந்து அங்கு குடியேறிய மக்கள் பெரிதும் உதவிகரமாக இருந்தாா்கள். எனவே, அவா்கள் பிகாரிலும் எங்களுக்கு உதவுவாா்கள் என்பது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் நம்பிக்கையாக உள்ளது.

பிகாா் மக்களுடன் மட்டும்தான் எங்கள் கூட்டணி, எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. தில்லி, பஞ்சாபில் கல்வி, சுகாதாரம், பொது நிா்வாகம் என பல துறைகளில் ஆம் ஆத்மி சாதித்துள்ளது.

இங்கு பிரசாந்த் கிஷோா் மாற்றங்கள் குறித்துப் பேசிதான் வருகிறாா். நாங்கள் அதை ஏற்கெனவே சாதித்துவிட்டோம். முதல் கட்டமாக 11 தொகுதிகளில வேட்பாளா்களை அறிவித்துள்ளோம். பிகாரில் அனைத்து 243 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். விரைவில் முழுவீச்சில் பிரசாரத்தைத் தொடங்குவோம். கேஜரிவால் உள்பட அனைத்து முன்னணி தலைவா்களும் பிரசாரம் மேற்கொள்வாா்கள் என்றாா்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT