இந்தியா

மேற்கு வங்கத்தில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு! பலர் மாயம்

மேற்கு வங்கத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்க மாநிலத்தில், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 28 பேர் பலியாகினர். பலர் காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டார்ஜிலிங் மற்றும் கூக் பெஹர் பகுதி வரை வெள்ளம் சூழ்ந்திருப்பதாகவும் பல இடங்களில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டும், மோசமாக சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மலைப்பிரதேசமாகவும், சுற்றுலா தலமாகவும இருக்கும் மிரிக், படுமோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு பலரைக் காணவில்லை என்றும், மீட்புப் படையினர் அப்பகுதிக்குள் செல்வதற்கு முடியாமல், இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டார்ஜிலிங்கில், சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து 24 மணி நேரத்தில் 261 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது மிக அதிதீவிர கனமழையாக பதிவாகியிருக்கிறது. கூக் பெஹரில் 192 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்றும் சிவப்பு எச்சரிக்கை

மலை மாவட்டங்களான டார்ஜீலிங் மற்றும் கலிம்போங்கில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதர்கவும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள்து.

டார்ஜீலிங் மாவட்டத்தையும், வடக்கு சிக்கிமை இணைக்கும் சாலைகளும், சிலிகுரி - மிரிக் டார்ஜீலிங்கை இணைக்கும் இரும்புப் பாலம் சேதமடைந்திருப்பதால், பல்வேறு பகுதிகள் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து தனித்துவிடப்பட்டிருப்பதாகவும், இப்பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ், வைகோவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்! உச்ச நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசல் பலி: அவதூறு பரப்பி கைதானவர்கள் பேசும் விடியோ! | TVK | Vijay

எனக்கு மரியாதை வேண்டாமா? சிம்பு குறித்து விஜய் சேதுபதி!

விலக மறுக்கும் திரைகள்

SCROLL FOR NEXT