கோப்புப்படம் ANI
இந்தியா

ம.பி.யில் குழந்தைகள் பலி: மேலும் 2 இருமல் மருந்துகளுக்குத் தடை!

மத்தியப் பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழப்பைத் தொடர்ந்து மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' எனும் இருமல் மருந்தால் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயதுடைய 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

பெயிண்ட், மை, ரெசின், டை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைஎத்திலீன் கிளைகால் எனப்படும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் இருமல் மருந்தில் கலக்கப்பட்டுள்ளதும் அது குழந்தைகளிடையே சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டில் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த நிறுவனமும் மூடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மற்ற இருமல் மருந்துகளும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் இரண்டு இருமல் மருந்துகளில் டைஎத்திலீன் கிளைகால் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

'ரீ லைஃப்'(ReLife) மற்றும் 'ரெஸ்பிஃபிரெஷ்'(Respifresh) ஆகிய இரு மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் டைஎத்திலீன் கிளைகால் இருப்பது தர பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இந்த இரு மருந்துகளுக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தடை விதிக்கப்படுவதாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

டைஎத்திலீன் கிளைகால் 0.1% மட்டுமே இருக்கவேண்டிய சூழலில் டைஎத்திலீன் கிளைகால் 0.616%, ரெஸ்பிஃபிரெஷ் 1.342% இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதல்வர் மோகன் யாதவ் கூறியுள்ளார். மேலும் உணவுத் துறை பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Madhya Pradesh FDA bans two more cough syrups after finding increased levels DEG

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக வெளிநாடு செல்லும் போப் 14-ம் லியோ!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

டூட் டிரைலர் தேதி!

பாலிவுட் வாசம்... சான்யா!

ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் அபிஷேக் சர்மா!

SCROLL FOR NEXT