தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்தம் குடும்பத்துக்கு ரூ. 35 லட்சம் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தூய்மைப் பணியாளர்கள் விபத்திலோ அல்லது எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் அவர்தம் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 35 முதல் 40 லட்சம் வரை வழங்கப்படும் என்று அம்மநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று(அக். 7) அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிகள் மூலம் பணம் செலுத்தப்படுவதை அரசு கண்காணித்து உறுதிசெய்யும் என்றும் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் இனிமேல், தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாநகராட்சியிலிருந்து அவர்தம் வங்கிக் கணக்குகளுக்கே ஊதியம் வழங்கப்படும். வெளிதரப்பு முகமைகள் மூலம் ஊதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு தரப்பிலிருந்து ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.