இந்தியாவி்ல் மொபைல் போன் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் முன்னணி டிஜிட்டல் தொழில்நுட்ப கண்காட்சியான 9வது இந்திய மொபைல் காங்கிரஸ் கண்காட்சியைப் பிரதமர் மோடி தில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியானது அக். 8 முதல் 11-ம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது.
மொபைல் காங்கிரஸ் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர்,
இந்தியாவின் ஜனநாயக அமைப்பு, அரசின் வரவேற்கும் அணுகுமுறை மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான கொள்கைகள் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்யவும், உற்பத்தி செய்யவும் இதுவே சிறந்த நேரம். ஆகஸ்ட் 15ல் வெளியிட்ட அறிவிப்பால் இந்தாண்டு பெரிய மாற்றங்கள் மற்றும் பெரிய சீர்திருத்தங்களின் ஆண்டாக இருக்கும். சீர்திருத்தங்களின் வேகத்தை நாங்கள் அதிகரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
கடந்த மாதம் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி விகிதங்களால் ஷாம்பு முதல் தொலைக்காட்சி பெட்டி வரை மலிவானதாக மாறியுள்ளது. இந்தியா, குறைக்கடத்திகள், மொபைல்கள் மற்றும் மின்னணுவியல் உற்பத்தியில் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.
தொழில்துறை, கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இப்போது முன்னேற வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் டிஜிட்டல் துறையில் இந்தியா அடைந்துள்ள மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பட்டியலிட்ட அவர், இந்தியாவில் 1 ஜிபி வயர்லெஸ் டேட்டா ஒரு கோப்பை தேநீர் விலையை விட மலிவானது என்றார்.
இந்தியாவில் டிஜிட்டல் இணைப்பு இனி ஒரு சலுகையைத் தவிர ஆடம்பரமல்ல. இது இப்போது ஒவ்வொரு இந்தியனின் வாழ்விலும் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்தியா இன்று உலகின் மிக வேகமாக வளரும் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: கவின் - நயன்தாரா படத்தின் அப்டேட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.