ANI
இந்தியா

இருமல் மருந்து விவகாரம்! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா? உலக சுகாதார அமைப்பு கேள்வி

வெளிநாடுகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா? என்று உலக சுகாதார அமைப்பு கேள்வி

இணையதளச் செய்திப் பிரிவு

குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்று உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா? என்று தெரிந்தால்தான், மற்ற நாடுகளுக்கு எச்சரிக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' எனும் இருமல் மருந்தால் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெயிண்ட், மை, ரெசின், டை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைஎத்திலீன் கிளைகால் எனும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் இருமல் மருந்தில் அதிகமாக கலக்கப்பட்டுள்ளதும், அது குழந்தைகளிடையே சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளதும் ஆய்வில் உறுதியானது.

இதனையடுத்து, உடனடியாக தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டில் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த நிறுவனமும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருந்தால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமான கோல்ட்ரிப் மருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா? என்று மத்திய அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தக் கேள்விக்கு மத்திய அரசு அளிக்கும் பதில் மூலமாகத்தான், மற்ற நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

இதையும் படிக்க: இருமல் மருந்தினால் குழந்தைகள் பலி 20 ஆக உயர்வு; மருத்துவர்கள் போராட்டம்! ஏன் தெரியுமா?

WHO seeks Indian clarification over export of Coldrif syrup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT