ஸுபீன் கர்க்குடன் சந்தீபன் கர்க். எக்ஸ்
இந்தியா

ஸுபீன் கர்க் மரணத்தில் திடீர் திருப்பம்! உறவினரான போலீஸ் டிஎஸ்பி கைது!

ஸுபீன் கர்க் மரணத்தில் அவரது உறவினரான போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணத்தில், இதுதொடர்பாக அவரது உறவினரான சந்தீபன் கர்க் என்பவரை காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.

வடகிழக்கு இந்திய கலாசார விழாவில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்த பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்க் அங்கு கடலில் குளிக்கும்போது செப்.19-ல் நீரில் மூழ்கி பலியானதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் அவர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பலியாகவில்லை, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது.

ஸ்பீனின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஸ்பீனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, ஸுபீன் கர்க் கலந்து கொள்ளச் சென்றிருந்த விழாவின் ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா, பாடகரின் மேலாளர் சித்தார்த் சர்மா, இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி, பாடகர் அமிர்தப்ரவா மஹந்தா ஆகியோரை மத்தியப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் 5-வது நபராக ஸுபீனின் தந்தைவழி மாமாவின் மகன் சந்தீபன் கர்க் என்பவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.

அசாம் காவல் சேவை அதிகாரியாக வேலை பார்த்துவரும் சந்தீபன், காம்ரூப் மாவட்டத்திற்கான சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். சந்தீபன் கர்க்கை 14 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உறவினரான போலீஸ் அதிகாரியே பாடகர் கொலையில் ஈடுபட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zubeen Garg's cop cousin arrested, was at Singapore yacht party where singer died

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெற்றோர் இல்லாத வாழ்வு கொடூரமானது: பிக் பாஸில் நந்தினி உருக்கம்!

செல்லாண்டியம்மன் கோயில் புரட்டாசித் திருவிழா

கூடலழகா் பெருமாள் கோயில் கருட சேவை

ராகுலை சந்திக்க விஜய்க்கு யார் அனுமதியும் தேவையில்லை: கே.எஸ். அழகிரி

வெள்ளைப் புறாவொன்று... மதுமிதா!

SCROLL FOR NEXT