இந்தியா

மக்களே உஷார்!! வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழால் ரூ. 97,000 மோசடி!

ஹரியாணாவில் வாட்ஸ் ஆப்பில் திருமண அழைப்பிதழ் அனுப்பி, ஹேக் செய்து ரூ. 97,000 மோசடி செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஹரியாணாவில் வாட்ஸ் ஆப்பில் கிடைக்கப்பெற்ற திருமண அழைப்பிதழால் ரூ. 97,000 மோசடி செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் ஒருவர் புகாரளித்துள்ளார்.

ஹரியாணாவின் குருகிராமில் வசித்துவரும் ஒருவர், தன்னிடம் சைபர் கிரைம் மோசடியாளர்கள் ரூ. 97,000 மோசடி செய்துவிட்டதாக சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் அவர் தெரிவித்ததாவது, வாட்ஸ்ஆப்பில் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து (Unknown Number) திருமண அழைப்பிதழ் ஒன்று வந்தது. தனக்கு யார் திருமண அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறார்? என்ற ஆர்வமிகுதியில் அவரும் திருமண அழைப்பிதழை கிளிக் செய்துள்ளார். அவர் கிளிக் செய்தவுடன், அவருடைய மொபைலை சைபர் மோசடியாளர்கள் ஹேக் செய்து விட்டனர்.

தன்னுடைய மொபைல் ஹேக் செய்யப்பட்டதை உணரும் தருணத்துக்குள்ளாகவே, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 3 நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ. 97,000 வரையில் இணைய வழியாகவே கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து, சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், தெரியாத எண்களிலிருந்து வரும் இணைப்புகளை (Link) கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

சமீபகாலமாக இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வரும்நிலையில், மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு மத்திய அரசும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இதையும் படிக்க: மக்களே உஷார்!! பஹல்காம் தாக்குதல் பெயரால் முதியவரிடம் ரூ.70 லட்சம் மோசடி!

Gurugram man clicks on WhatsApp wedding invite, loses Rs 97,000 to cyber fraud

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!

ஷேன் நிகாமின் புதிய படத்தில்..! மாட்டிறைச்சி காட்சியை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு!

பிக் பாஸ் வீடு மீண்டும் திறப்பு! நன்றி தெரிவித்த கிச்சா சுதீப்!

3-வது சதம் விளாசிய மார்னஸ் லபுஷேன்; ஆஸி. அணியில் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்பாரா?

ரிங்கு சிங்கிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்! தாவூத் இப்ராஹிம் கும்பலை சேர்ந்த இருவர் கைது!

SCROLL FOR NEXT