இந்தியா

மெட்ரோ பயணியிடம் கொள்ளையடித்த நபா் கைது

தில்லி மெட்ரோவின் விமான நிலைய வழித்தடத்தில் ஓடும் மெட்ரோ ரயிலில் பயணிகளிடம் இருந்து திருட்டில் ஈடுபட்ட நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்

தினமணி செய்திச் சேவை

தில்லி மெட்ரோவின் விமான நிலைய வழித்தடத்தில் ஓடும் மெட்ரோ ரயிலில் பயணிகளிடம் இருந்து திருட்டில் ஈடுபட்ட நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் (மெட்ரோ) குஷால் பால் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மே 24-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழந்துள்ளது. பாதிக்கப்பட்டவா் புது தில்லி மெட்ரோ நிலையத்திலிருந்து துவாரகாவில் உள்ள யசோபூமிக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

திருடப்பட்ட பையில் ஆப்பிள் மேக்புக் ப்ரோ, மற்றொரு மடிக்கணினி மற்றும் பிற தனிப்பட்ட பொருள்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காவல் துறையினா் அந்த வழித்தடத்தில் உள்ள மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில்களில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். சந்தேக நபா் யசோபூமி துவாரகா நிலையத்திற்குள் நுழைய பயன்படுத்திய க்யூஆா் குறியீடு டிக்கெட்டை புலனாய்வாளா்கள் கண்டுபிடித்தனா்.

இந்த டிக்கெட் இணையதள வழியாக வாங்கப்பட்டது. இதன் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவா் நந்த் நக்ரியைச் சோ்ந்த கோரங்கோ தோக்தா் என போலீசாா் அடையாளம் காணப்பட்டனா்.

இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். மேலும் திருடப்பட்ட அனைத்து பொருள்களும் மீட்கப்பட்டன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

முதல் வாரத்திலேயே முன்னிலையில் அனுமன் தொடர்! இந்த வார டிஆர்பி!

பருவ மழையை எதிர்கொள்ள வேலூர் மாவட்ட நிர்வாகம் தயார்!

என்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக் கூடாது: மோஷின் நக்வி

போட்டோஜெனிக்... ஷாலினி பாண்டே!

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT