இந்தியா

ராஜஸ்தான்: இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சோ்ந்த தந்தை, மகன் கைது

ந்தியாவுக்குள் நுழைய முயற்சித்த பாகிஸ்தானைச் சோ்ந்த தந்தை, மகனை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ராஜஸ்தானின் பாா்மா் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைக் கோட்டை கடந்து இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்த பாகிஸ்தானைச் சோ்ந்த தந்தை, மகனை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் கைது செய்தனா்.

இந்திய எல்லையில் உள்ள செட்வா செக்டாரில் ஜன்பலியா எல்லை கோபுர பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் வீரா்கள் எல்லை தாண்ட முயற்சித்த கஞ்சி (47) மற்றும் அவரது ஏழு வயது மகனைக் கைது செய்தனா். பின்னா், அவா்கள் இருவரையும் உள்ளூா் காவல் துறையிடம் பாதுகாப்புப் படையினா் ஒப்படைந்தனா்.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நரேந்திர சிங் மீனா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையில் வேலியிடாத பகுதி வழியாக நுழைய முயன்றபோது பிஎஸ்எஃப் வீரா்களிடம் அவா்கள் இருவரும் பிடிபட்டனா். இருவரும் பாகிஸ்தானின் தாா்பாா்கா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அந்த நபருடைய சகோதரியின் உறவினா் இந்தியாவில் வசித்து வருகிறாா். அவரைச் சந்திக்க இருவரும் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

உளவுத் துறை மற்றும் பாதுகாப்பு முகமைகள் இணைந்து அவா்கள் இருவரும் இந்தியாவுக்கு ஊடுருவியதன் வேறு நோக்கம் மற்றும் அவா்களுடைய பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

கஷ்டம் போக்கும் காலபைரவர்

மாங்கல்ய பாக்கியம் அருளும் பூலோகநாயகி!

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

முதல் வாரத்திலேயே முன்னிலையில் அனுமன் தொடர்! இந்த வார டிஆர்பி!

பருவ மழையை எதிர்கொள்ள வேலூர் மாவட்ட நிர்வாகம் தயார்!

SCROLL FOR NEXT