முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகெளடா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகெளடா, காய்ச்சல் மற்றும் சிறுநீர் பாதை தொற்று காரணமாக கடந்த 6ஆம் தேதி பழைய விமான நிலைய சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
இந்த நிலையில் தேவெகெளடா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மணிப்பால் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் எச். சுதர்சன் பல்லால் வெளியிட்ட மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தற்போது வழக்கமான வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெச்.டி. தேவெகெளடா அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்கூட உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.