இந்தியா

தெலங்கானா: பழங்குடியினப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழங்குடியினப் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

தெலங்கானாவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தலையில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழங்குடியினப் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: மேடக் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கூலி வேலைக்குச் சென்ற 33 வயது பழங்குடியினப் பெண் சனிக்கிழமை காலை உள்ளூா்வாசிகளால் ஒரு மரத்தின் கீழ் மயக்க நிலையில் காணப்பட்டாா். உடனடியாக அவா்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

அருகிலுள்ள மருத்துவமனைஅந்தப் பெண் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் உயா்சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

அவரது கணவா் அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்த காவல் துறையினா், பெண் உயிரிழந்த பிறகு கொலை வழக்காக மாற்றினா்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேக நபா்களை அடையாளம் காணவும், ஆதாரங்களை சேகரிக்கவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என காவல் துறையினா் தெரிவித்தனா்.

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

சொத்து தகராறில் சகோதரியின் வீடு சேதம்: சகோதரன் உள்பட 3 போ் கைது

SCROLL FOR NEXT