இந்தியா

உள்நாட்டு கடல்சார் தொழில் துறையில் ரூ.80 லட்சம் கோடி முதலீடு எதிர்பார்ப்பு: சர்வானந்த சோனோவால்

உள்நாட்டு கடல்சார் தொழில்துறையில் ரூ.80 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்படும் என மத்திய நீர்ப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தினமணி செய்திச் சேவை

உள்நாட்டு கடல்சார் தொழில்துறையில் ரூ.80 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்படும் என மத்திய நீர்ப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 4-ஆவது இந்திய கடல்சார் வார விழா அக்.27-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.

இந்த விழா குறித்து மும்பையில் சர்வானந்தா சோனோவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய கடல்சார் தொழில்துறையின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நம் நாட்டில் உள்ள துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் தளவாடங்கள் அமைப்பை எதிர்காலத்துக்கு உகந்த வகையில் நீடித்த தரமுடையதாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2047-இல் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் கடல்சார் துறையும் முக்கியப் பங்காற்றவுள்ளது. இத்துறையில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்தவும் நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் ரூ.80 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படவுள்ளன.

மும்பையில் அக்.27-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்திய கடல்சார் வார விழாவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்கள் உள்பட 1 லட்சம் போர் பங்கேற்கின்றனர் என்றார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய நீர்ப்போக்குவரத்துத் துறைச் செயலர் விஜய் குமார், "5 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் கப்பல் கட்டுமானத் துறைக்கு ரூ.3 லட்சம் கோடி, நீடித்த வளர்ச்சிக்கு ரூ.2 லட்சம் கோடி, துறைமுகங்களை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு ரூ.2 லட்சம் கோடி, துறைமுகம் சார்ந்த தொழில்துறைக்கு ரூ.1 லட்சம் கோடி உள்பட மொத்தம் ரூ.10 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எழுத்து அணிந்த கவிதை... மோனாமி கோஷ்!

பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்களுடன் ஜேடியு முதல் பட்டியல் வெளியீடு!

மத்திய அரசுப் பள்ளியில் 7,267 காலியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை!

சக்தித் திருமகன் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT