தீபாவளி மற்றும் சத் பூஜை விடுமுறையையொட்டி நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அக். 15 - 28 வரையிலான காலகட்டத்தில் திரளான பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வருகை தருவார்கள் என்பதைக் கருதி கூட்ட நெரிசல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க இந்த நடவடிக்கையை வடக்கு ரயில்வே எடுத்துள்ளது.
இதையடுத்து, புது தில்லி, ஓல்டு தில்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், ஆனந்த் விஹார், காஜியாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.