இந்தியா

பிகார் சட்டப் பேரவைத் தேர்தல்: ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி போட்டி

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில், ரகோபூர் தொகுதியில் போட்டியிட ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

தினமணி செய்திச் சேவை

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில், ரகோபூர் தொகுதியில் போட்டியிட ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

35 வயதாகும் தேஜஸ்வி, ரகோபூர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பிகாரில் அடுத்த மாதம் இருகட்டங்களாக (நவ.6, 11) பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 121 தொகுதிகளில் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இதில் ஒன்றான ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஆர்ஜேடி நிறுவனரும், தேஜஸ்வியின் தந்தையுமான லாலு பிரசாத், தாயார் ராப்ரி தேவி, மூத்த சகோதரியும் எம்.பி.யுமான மிசா பாரதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய உதவியாளர்களும் தேஜஸ்வியுடன் சென்றனர்.

பாட்னாவில் இருந்து ஹாஜிபூரில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு 40 கி.மீ. அவர் காரில் பயணித்தபோது, சாலையில் இருபுறமும் திரண்டிருந்த கட்சியினர் தேஜஸ்விக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிகார் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகளின் "மகாகட்பந்தன்' கூட்டணியில் தொகுதி உடன்பாடு அறிவிக்கப்படும் முன்பே, தனது தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் லாலு, ராப்ரி தேவி ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதியான ரகோபூரில் கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து தேஜஸ்வி எம்எல்ஏவாக உள்ளார்.

இரு தொகுதிகளில் போட்டி?: பிகார் தேர்தலில் தேஜஸ்வி இரு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஊகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் மறுப்பு தெரிவித்தார். ரகோபூர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெல்வேன் என்றார் அவர்.

ரூ.8 கோடி சொத்து

வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ரூ.8.1 கோடி மதிப்பிலான சொத்துகளும், மனைவி ராஜ்ஸ்ரீ-க்கு ரூ.1.88 கோடி சொத்துகளும் இருப்பதாக தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளார். பல்வேறு வங்கிகளில் தனக்கு ரூ.55.55 லட்சம் கடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெஞ்சமே நெஞ்சமே... அனுஷ்கா ரஞ்சன்!

தீபாவளியன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

கச்சத்தீவு மீட்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்தூரில் 24 திருநங்கைகள் கூட்டாகத் தற்கொலை முயற்சி! 2 பேரது உடல்நிலை கவலைக்கிடம்!

நெருங்கும் தீபாவளி: மதுரையில் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT