ஒடிஸாவில் அரசுப் பணியாளர்களின் அகவிலைப்படியை 3 சதவீதமாக உயர்த்தி அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மாநிலத்தின் அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசுப் பணியாளர்கள், பள்ளி ஆசியர்கள், அரசு உதவி பெறும் கல்லூரி விரிவுரையாளர்கள் ஆகியோரும் பயனடைவார்கள்.
இந்த அகவிப்படி உயர்வானது ஜூலை 1, 2025 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும்.
இதன் மூலம் பணியாளர்களுக்கான மொத்த அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வின் மூலம் ஒடிசாவில் 8.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.