கேரளத்தில் வயதான பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தங்கச் சங்கிலியைப் பறித்ததாக கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், கண்ணூரில் ஜானகி (77) என்பவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்திருந்த ஒருவர் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
தொடர்ந்து ஜானகியின் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அவர் தப்பிச் சென்றார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஜானகியின் வீட்டிற்கு விரைந்தனர். இருப்பினும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இந்த ஆதாரத்தை வைத்து சிபிஐ (எம்) கவுன்சிலர் பி.பி. ராஜேஷ் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.