தில்லியில் உள்ள எம்பிக்கள் குடியிருப்பில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தில்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்திரா அடுக்குமாடிக் குடியிருப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டு இந்தக் கட்டடம் புதிதாகக் கட்டி திறப்பு விழா கண்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்திற்கு 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்பு ஒன்றில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது அருகில் உள்ள கட்டடங்களுக்கும் பரவி மளமளவென எறியத் தொடங்கியது.
ஆனால், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 14 தீயணைப்பு வாகனங்களின் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை என்பதால் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.