மும்பை: பண்டைய காலத்தில் இந்தியர்கள் கலாசாரத்தையும் அறிவியலையும் பரப்புவதற்காக உலகம் முழுவதும் பயணம் செய்தனர், ஆனால் மத மாற்றத்தில் ஈடுபடவில்லை என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
மும்பையில் ஆரிய யுக விஷய கோஷ் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய பாகவத், பல படையெடுப்பாளர்கள் இந்தியாவைக் கொள்ளையடித்து அடிமைப்படுத்தினர் என்றும், கடைசியாக படையெடுத்தவர்கள் இந்தியர்களின் மனதைக் கொள்ளையடித்ததாக கூறினார்.
நமது மூதாதையர்கள் மெக்சிகோவிலிருந்து சைபீரியாவுக்குப் பயணம் செய்து உலகிற்கு அறிவியலையும் கலாசாரத்தையும் போதித்தார்கள். ஆனால் அவர்கள் யாரையும் மத மாற்றும் செய்யும் செயல்களில் ஈடுபடவில்லை. அவர்கள் நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமையின் தகவலுடன் பயணம் செய்ததாக அவர் மேலும் கூறினார்.
பல படையெடுப்பாளர்கள் வந்து நம்மைக் கொள்ளையடித்து அடிமைகளாக்கினர். கடைசியாக படையெடுத்தவர்கள் நம் மனதைக் கொள்ளையடித்தனர். நாம் நமது பலங்களையும், உலகத்துடன் பகிர்ந்து கொள்ளக்கூடியவற்றையும் மறந்துவிட்டோம் என்றார்.
மேலும், "ஆன்மீக அறிவு இன்னும் பலமடைந்து வருகிறது, ஆரியவிரதத்தின் சந்ததியினராகிய நமக்கு அறிவியல் மற்றும் ஆயுதங்கள், வலிமை மற்றும் சக்தி, நம்பிக்கை மற்றும் அறிவு இருக்கிறது," என்று பாகவத் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.