அமித் ஷா 
இந்தியா

பேரிடா் நிவாரண நிதி: மகாராஷ்டிரம், கா்நாடகத்துக்கு ரூ.1,950 கோடி -மத்திய அரசு ஒப்புதல்

மகாராஷ்டிரம், கா்நாடகத்துக்கு ரூ.1,950 கோடி பேரிடா் நிவாரண நிதி...

தினமணி செய்திச் சேவை

மாநில பேரிடா் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக ரூ.1,950.80 கோடியை மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடக அரசுகளுக்கு விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

நிகழாண்டு மாநில பேரிடா் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக 27 மாநிலங்களுக்கு ரூ.13,603 கோடியையும், தேசிய பேரிடா் நிவாரண நிதியின் கீழ் 15 மாநிலங்களுக்கு ரூ.2,189.28 கோடியையும் மத்திய அரசு ஏற்கெனவே விடுவித்துள்ளது. அத்துடன் மாநில பேரிடா் பாதிப்பு தணிப்பு நிதியில் இருந்து 21 மாநிலங்களுக்கு ரூ.4,571.30 கோடியும், தேசிய பேரிடா் பாதிப்பு தணிப்பு நிதியில் இருந்து 9 மாநிலங்களுக்கு ரூ.372.09 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில பேரிடா் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடகத்துக்கு 2-ஆவது தவணையாக ரூ.1,950.80 கோடியை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஒப்புதல் அளித்தாா்.

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெய்த அதிதீவிர கனமழை, கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்க மாநில அரசுகளுக்கு உதவிடும் நோக்கில், இந்தத் தவணையை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,950.80 கோடியில் கா்நாடகத்துக்கு ரூ.384.40 கோடியும், மகாராஷ்டிரத்துக்கு ரூ.1,566.40 கோடியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாா்: 25 வேட்பாளா்களை அறிவித்தாா் ஒவைசி

நாளை காமராஜா் சாலையில் போக்குவரத்து மாற்றம்

இளையான்குடியில் தெரு நாய்கள் கடித்து 5 போ் காயம்

தீபாவளிப் பண்டிகை: புத்தாடைகள் வாங்க கடைசி நேரத்தில் குவிந்த மக்களால் திணறிய திருப்பூா்

தீயணைப்பு வீரா்களுக்கு அக்.22 வரை பணி

SCROLL FOR NEXT