கோவாவில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
ஐஎன்எஸ் போர்க்கப்பலில் கடற்படை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இனிப்புகளை ஊட்டி தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தனது தீபாவளியைக் கொண்டாடினார். கடந்த சில ஆண்டுகளாகவே முப்படையின் ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்த வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடி வருகிறார்.
அந்தவகையில் கோவாவில் ஐஎன்எஸ் போர்க்கப்பலில் கடற்படை வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார். ஒவ்வொருவராகச் சந்தித்துப் பேசிய மோடி, பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, துணிச்சல் மிக்க வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது எனது அதிருஷ்டம் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
ஐஎன்எஸ் விக்ராந்த்தான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் ஆயுதப் படையின் பலத்தை நிரூபிக்க இது சிறந்த உதாரணமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பிகார் தேர்தல்: 143 வேட்பாளர்களை அறிவித்த தேஜஸ்வி யாதவ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.