ஃபரூக் அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கோப்புப்படம்
இந்தியா

காஷ்மீரின் குரல்! ஃபரூக் அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஃபரூக் அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து...

தினமணி செய்திச் சேவை

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

அவரது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“காஷ்மீரத்தின் உரிமைகளும் தன்னாட்சியும் சிதைக்கப்பட்டு வருவதற்கு எதிரான காஷ்மீரினது குரலின் அடையாளமாக ஃபரூக் அப்துல்லா போராடி வருகிறார்.

அவர் மகிழ்ச்சியோடும், நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் திகழ விழைகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Chief Minister Stalin wishes Farooq Abdullah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் குடியரசுத் தலைவர்!சபரிமலையில் நாளை சுவாமி தரிசனம்!

அம்மாவின் சேலை... நபா நடேஷ்!

சிவப்பழகு... ஷில்பா ஷெட்டி!

ஹேப்பி தீபாவளி... டயானா பென்டி!

இரவில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT