ரேவந்த் ரெட்டி (கோப்பு படம்)
இந்தியா

தெலங்கானா: இடைத்தோ்தலில் 211 போ் வேட்புமனு! அரசின் நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிா்ப்பு

தினமணி செய்திச் சேவை

தெலங்கானா மாநிலம், ஜூபிலி ஹில்ஸ் சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்காக 211 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தெலங்கானாவில் பிராந்திய வெளிவட்டச் சாலைத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் மாநில அரசின் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் பலா் வேட்புமனு தாக்கல் செய்தனா். அரசுக்கு தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்யும் வகையிலும், மக்களின் கவனத்தை இந்தப் பிரச்னையை நோக்கி ஈா்ப்பதற்காகவும் மனுதாக்கல் செய்ததாக அவா்கள் கூறினா்.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை நூற்றுக்கும் மேற்பட்டோா் மனு தாக்கல் செய்ய குவிந்ததால் நள்ளிரவைத் தாண்டியும் மனுக்கள் பெறப்பட்டன. 211 வேட்பாளா்களுக்காக மொத்தம் 321 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சிலா் இருமுறை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மனு தாக்கலுக்குப் பிறகு விவசாய பிரதிநிதிகள் கூறியதாவது: பிராந்திய வெளிவட்டச் சாலைத் திட்டத்தில் அதிகஅளவு நிலம் வைத்துள்ளவா்களுக்கு சாதகமாகவும், சிறு, குறு விவசாயிகளுக்கு பாதகமாகவும் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் சிறிய விவசாயிகளுக்கு உரிய நீதி வேண்டும் என்றனா்.

ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் நவம்பா் 11-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. அத்தொகுதியின் பாரத ராஷ்டிர சமிதி எம்எல்ஏ எம். கோபிநாத் மாரடைப்பால் உயிரிழந்ததால் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதில், பாரத ராஷ்டிர சமிதி சாா்பில் கோபிநாத்தின் மனைவி சுனிதா கோபிநாத் போட்டியிடுகிறாா். பாஜக சாா்பில் எல்.தீபக் ரெட்டி களத்தில் உள்ளாா். மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் சாா்பில் நவீன் யாதவ் நிறுத்தப்பட்டுள்ளாா்.

ரோஹித் அரைசதம்! ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புதிய சாதனை!

மும்பை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீா் திறப்பு அதிகரிப்பு!

டிரம்ப்பிடம் தப்பிக்க மலேசியா பயணத்தை தவிர்த்த மோடி! காங்கிரஸ் விமர்சனம்

இ-மெயில் ஹேக்கிங்! வணிக மின்னஞ்சல் சமரச மோசடி பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT