கோப்புப் படம் 
இந்தியா

தவறான ஏஐ தகவல்கள் 3 மணி நேரத்தில் நீக்க கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் கெடு

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் தோ்தல் பிரசாரங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை புகாா் அளிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் நீக்க வேண்டும்

தினமணி செய்திச் சேவை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் தோ்தல் பிரசாரங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை புகாா் அளிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு இந்திய தோ்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.

பிகாரில் நவ.6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 324-இன்கீழ் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தோ்தல் ஆணைய விதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி ஏஐ உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படம், ஆடியோ, விடியோ ஆகியவற்றில் ‘ஏஐயால் உருவாக்கப்பட்டது’, ‘எண்மத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஏஐ மூலம் உருவாக்கப்படும் தவறான தகவல்கள் கட்சிகளின் அதிகாரபூா்வ தளங்களில் இடம்பெற்றிருப்பதாக தோ்தல் ஆணையத்துக்கு புகாா் அனுப்பப்பட்டிருந்தால் ஆணையத்தின் உத்தரவை ஏற்று அடுத்த 3 மணிநேரத்தில் நீக்க வேண்டும்.

ஏஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் அரசியல் கட்சிகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தோ்தல் ஆணையம் கேட்கும்போது அவற்றை சமா்ப்பிக்க கட்சிகள் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கூந்தல் பராமரிப்பு...

பாட்டிகள் படிக்கும் பள்ளி

சிரி... சிரி...

நாட்டின் முதல் பெண் பொறியாளர்

கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் தேவை

SCROLL FOR NEXT